பிரபல பாலிவுட் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை ஸ்ரீலீலா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் ஸ்ரீலீலா. இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், தற்போது நடனத்தை தாண்டி நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் தமிழில் வெளியான ஓ.ம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்து
நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபீ புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் ஆர்யனுடன் நடிகை ஸ்ரீலீலா தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அனுராக் பாஸு இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இதுவரை தலைப்பிடவில்லை என்றாலும், இது ஆஷிக் 3 என ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.