வசதிக்காக காதலிப்பது காதல் கிடையாது..திருமணம் செய்ய நினைத்தால் காதலி!! வனிதா போஸ்ட்..

வசதிக்காக காதலிப்பது காதல் கிடையாது..திருமணம் செய்ய நினைத்தால் காதலி!! வனிதா போஸ்ட்..

நடிகை வனிதா இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி பகிர்ந்திருந்தது பலரது கவனத்தையும் பெற்றும் மீண்டும் காதல் தோல்வியை சந்தித்து எமோஷனல் ஆகிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

வனிதா விஜயகுமார்

நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார், ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளை பெற்று விவாகரத்துக்களை செய்தவர்.
 

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், திருமணம் செய்து கொள்ள நினைத்து காதலிக்கவும். ஏனென்றால் இன்னொருவரின் இதயம் ஒன்றும் விளையாட்டு மைதானம் இல்லை. காதல் என்பது கேஷுவலானது அல்ல, அது கமிட்மெண்ட், எப்போதும் தொடர வேண்டியது. அதற்கு தயாராக இல்லை என்றால் அவர்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். பாதி மனதாக இருந்தால் காதலிக்க வேண்டாம். வசதிக்காக காதலிப்பது காதல் கிடையாது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனதால் காயப்பட்ட இதங்கள் குணமாகி வரும் சமயத்தில் அதை நோகடிக்க வேண்டாம். உண்மையாக இருக்க முடிந்தால் காதலிக்கவும், இல்லை என்றால் காதலிக்க வேண்டாம். சும்மா வந்துவிட்டு போகும் இடம் இதயம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த பலரும் அன்பு, பாசத்திற்கும் லவ் என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள், ஆனால் வனிதா இங்கு திருமணம் என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். இது காதல் தான் என்றும் அவர் யாரை சின்சியராக காதலித்தார் என்ற கேள்வியும் கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

LATEST News

Trending News