பிரபு தேவாவின் திரைப்படத்தில் நடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர், யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் பாரதி கண்ணம்மா தொடர் மற்ற தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களுக்கு TRP-யில் டப் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹிரா படத்தில் நடிகர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்திற்காக தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார் அகிலன்.