'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை

'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் தமிழிலும் ‘ஆதித்யவர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அதில் துருவ் விக்ரம் அறிமுகமானார் என்பதும் தெரிந்ததே. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெலுங்கு திரையுலகின் ஆச்சரியமான ஒன்றாகும்.

இந்த நிலையில் ’அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நாயகி வேடத்தில் ஷாலினி பாண்டே நடித்திருந்தார் என்பதும் அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் நாயகி கேரக்டரில் முதலில் நடிக்க பார்வதி நாயர் இடம் பேசப்பட்டதாகவும், அதற்கு அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சமூகத்தில் பதிலளித்த பார்வதி நாயர் ’அர்ஜுன் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான். அந்த படம் மிக நல்ல படம். நான் அந்த படத்தை தவற விட்டுவிட்டு இருக்க கூடாது. ஆனால் எதுவாக இருந்தாலும் நமக்கு என கிடைப்பது மட்டும்தான் கிடைக்கும். அதைவிட இன்னும் நல்ல படங்கள் எனக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் அஜித்தின் ’என்னை அறிந்தால்’, கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த பார்வதி நாயர், தற்போது ’ஆலம்பனா’ என்ற தமிழ் படத்திலும் ’83’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News