சங்கீதாவுடன் விஜய் சமாதானம்?.. தளபதியை அன்ஃபாலோ செய்த திரிஷா?.. ஆஹா இது என்ன புதுசா இருக்கு?

சங்கீதாவுடன் விஜய் சமாதானம்?.. தளபதியை அன்ஃபாலோ செய்த திரிஷா?.. ஆஹா இது என்ன புதுசா இருக்கு?

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்டிருக்கும் சூழலில்; இந்தப் பிரச்னையில் திரிஷாவின் பெயரும் பலமாகவே அடிபடுகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு திரிஷா வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில்; அவர் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விஜய்யை திருமணம் செய்துகொண்ட சங்கீதா; கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்தார். இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று கடந்த வருடத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் எல்லாம்; கடந்த பிப்ரவரி மாதம் லீக்காகின. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருந்தன.

Did Trisha Unfollow Vijay Birthday Silence Fuels Fresh Social Media Speculation

நடிகையுடன் தொடர்பு: அந்த மனுவில் அவர், "எனது கணவர் விஜய்க்கு இன்னொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. இரண்டு பேரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்கள்" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். சங்கீதா இப்படி கூறியதை அடுத்து யார் அந்த நடிகை என தேடலில் ஈடுபட்டிருந்த சூழலில்; திரிஷாவும், விஜய்யும் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்தார்கள். மேலும், முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இருக்கை, அஜித் தாய் இறப்புக்கு விஜய்யுடன் சென்றதையெல்லாம் வைத்து அந்த நடிகை திரிஷாதான் என உறுதி செய்துகொண்டார்கள்.

வாழ்த்தாத திரிஷா: சூழல் இப்படி இருக்க நேற்று முதலமைச்சர் விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி திரிஷா என்ன மாதிரியான வாழ்த்தை சொல்லப்போகிறாரோ என்று வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான ஒரு பிறந்தநாளில்தான், விஜய்யுடன் லிஃப்ட்டில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் திரிஷா. ஆனால் இந்த முறை அவர் வாழ்த்து எதையும் தெரிவிக்கவில்லை.

அன்ஃபாலோ செய்த திரிஷா?: இந்நிலையில் சோஷியல் மீடியாவில் புது டாபிக் ஒன்று பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது இன்ஸ்டாகிராமில் திரிஷா விஜய்யை அன்ஃபாலோ செய்துவிட்டதாக பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. அதேசமயம், விஜய்யை திரிஷா முதலில் ஃபாலோ செய்யவே இல்லை; பிறகு எப்படி அன்ஃபாலோ செய்வார் என்றும் திரிஷாவின் ரசிகர்கள் அதற்கு பதிலடியும் கொடுத்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி இன்னொரு முணுமுணுப்பையும் அவர்களிடம் கேட்க முடிகிறது.

விஜய் - சங்கீதா சமாதானம்?: அதாவது விஜய்யும், சங்கீதாவும் தங்களுக்கிடையே இருக்கும் பிரச்னைகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டார்கள் என்று சில நாட்களாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அநேகமாக ஆகஸ்ட் ஏழாம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையிலும் அவர்கள் ஆஜராகமாட்டார்கள் என சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனித்த திரிஷா, மீண்டும் கணவரும், மனைவியும் சேரும்போது தான் ஒரு இடைஞ்சலாக இருக்கக்கூடாது; இந்த சமயத்தில் வாழ்த்து சொன்னால் தேவையில்லாத கிசுகிசுக்கள் கிளம்பும் என்பதால்தான் அவர் வாழ்த்தும் சொல்லவில்லை, அன்ஃபாலோவும் செய்துவிட்டார் என்ற கருத்து ஆழமாக எழுந்திருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES