பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படத்தில் அஞ்சலி!
பிரமாண்ட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பின்னர் பல தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தென்னிந்திய திரை உலகில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்குவற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக கைரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்றில் நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஷங்கரின் படத்தில் முதன்முதலாக அஞ்சலி நடிப்பதால் இந்த படத்திற்கு பின் அவருடைய மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.