விஷாலின் 31வது படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

விஷாலின் 31வது படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

டிகர் விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தை து.பா. சரவணன் என்பவர் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே

அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷாலின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் விஷாலின் 31வது படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், டிம்பிள் ஹயாதி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஷால் ’துப்பரிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

LATEST News

Trending News

HOT GALLERIES