ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் விஷால்..!

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் விஷால்..!

எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை 28 ஆம் தேதி திரைக்குவரும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷால் ஆண்டு தோறும் +2 தேர்வில் தேர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்கொண்டு படிக்க முடியாத விவசாய குடுபத்தினர், தாய் தந்தை இல்லாதவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் ஏழை, எளிய குடும்பத்தின் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்காக தனது தேவி அறக்கட்டளை சார்பில் உதவி செய்து வருகிறார்.

அதேபோன்று இந்த வருடம் +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மேற்கொண்டு படிக்க முடியாத ஏழை குடும்பத்தைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் பெற்றோருடன் கலந்துகொண்டார்கள்.

 

LATEST News

Trending News