புது தொழில் தொடங்கிய இயக்குனர் அமீர்! புகைப்படத்துடன் இதோ...
மெளனம் பேசியதே, பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். அவர் நடிகராகவும் வட சென்னை உட்பட பல படங்களிலும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
தற்போது இறைவன் மிக பெரியவன் என்ற படத்தினை அவர் இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அமீர் சென்னை ECR-இல் ஒரு ஹோட்டல் தொடங்கி இருக்கிறார். 4am Cafe & Kitchen என்ற அந்த ஹோட்டலின் திறப்பு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
திறப்பு விழா புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ..