நீண்ட இடைவெளிக்கு பின் பான் - இந்திய படம் இயக்கும் அர்ஜுன்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா!!

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிகர் மட்டுமின்றி சில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் அவர் இயக்கத்தில் உருவான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்தது. அந்த வகையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படம் பான் - இந்திய திரைப் படமாக அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அர்ஜுன் இயக்கத்தில் உருவான ’சேவகன்’ ’பிரதாப்’ ’ஜெய்ஹிந்த்’ ’தாயின் மணிக்கொடி’ ’வேதம்’ ’ஏழுமலை’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளன.

இந்த நிலையில் விஜய்யின் ’லியோ’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் அர்ஜுன் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நிரஞ்சன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவர் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’பட்டத்து யானை’ ’சொல்லி விடவா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாகவும், அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’கேஜிஎப்’ படத்துக்கு இசையமைத்த ஹித்தேஷ் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது.