தனுஷை வைத்து கல்லா கட்ட பார்த்த மிருணாள் தாகூர்!! கடைசியில் இப்படி அடிவாங்கிட்டாரே..
சீதா ராமம் படத்திற்குப் பின் இந்தியளவில் டிரெண்ட் நடிகையாக மாறியவர் தான் நடிகை மிருணாள் தாகூர். சமீபத்தில் அவர் நடித்து வெளியாகும் படங்கள் எல்லாம் பக்கா ஃபிளாப் படமாக மாறி வருகிறது. ஹை நான்னா, ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது.

தற்போது அவர் நடிப்பில் டூ தீவானே ஷெஹர் மேன் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் தனுஷை பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை பரப்பியது.
இதுகுறித்து பேசிய மிருணாள், 10 கோடி கொடுத்தாலும் இப்படியொரு பப்ளிசிட்டி எனக்கு கிடைத்திருக்காது என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரது படம் வெளியானப்பின் திட்டமிட்டே தனுஷ் பெயரை இவரே PR வைத்து பயன்படுத்தினாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தற்போது அவர் நடித்த டூ தீவானே ஷெஹர் மேன் படம் படுத்தேவிட்டதாம். முத்ல் நாளில் மட்டும் ரூ. 1.20 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.1.45 கோடியும் 3வது நாளில் ரூ. 1.35 கோடி என மொத்தம் வெறும் ரூ. 4 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது.

அடுத்த மாதம் துரந்தர் 2, டாக்ஸிக் படம் வெளிவரும் வரை இப்படம் ஓடினால் தான் கொஞ்சமாவது வசூலை எட்டமுடியும். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகி 10 கோடியாவது வசூலிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனுஷ் பெயரை வைத்து பப்ளிசிட்டி செய்து கல்லா கட்ட பார்த்த மிருணாள் தாகூருக்கு நஷ்டம் தான் மிச்சம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.