சீரியலில் இருந்து தூக்க காரணம்..சீரியலும் இல்ல..ரியாலிட்டி ஷோவும் இல்ல!! பிக்பாஸ் தாமரை ஓபன்..

சீரியலில் இருந்து தூக்க காரணம்..சீரியலும் இல்ல..ரியாலிட்டி ஷோவும் இல்ல!! பிக்பாஸ் தாமரை ஓபன்..

மேடை நாடகங்களில் ஆடிவந்த தாமரை செல்விக்கு, விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5வது சீசனில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை கொடுத்தது. பிக்பாஸ் டைட்டிலை வெல்லாவிட்டாலும் அந்நிகழ்ச்சிக்கு பின் பிக்பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டார் தாமரை.

அதன்பின் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு அம்மா ரோலில் நடித்தார். பின் திடீரென சீரியலில் இருந்து விலகி இன்ஸ்டாகிராமில் துரோகத்தை என்னால் தாங்க முடியவில்லை என்று கூறி வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

சீரியலில் இருந்து தூக்க காரணம்..சீரியலும் இல்ல..ரியாலிட்டி ஷோவும் இல்ல!! பிக்பாஸ் தாமரை ஓபன்.. | Thamarai Selvi Removed From Chinnamarumagal Serial

இந்நிலையில், சீரியலில் இருந்து விலகியது குறித்து தாமரை செல்வி ஓபனாக பேசியிருக்கிறார்.

அதில், எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்தது விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அந்நிகழ்ச்சியில் மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவால், நான் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தேன்.

எனக்கு விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, நல்ல ரோலில் நடித்துக்கொண்டு இருந்தேன். அந்நேரம் சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தேன். இருநாள் சீரியல் ஷூட்டிங்கிற்கு என்னால் தேதி தரமுடியாமல் போனது.

சீரியலில் இருந்து தூக்க காரணம்..சீரியலும் இல்ல..ரியாலிட்டி ஷோவும் இல்ல!! பிக்பாஸ் தாமரை ஓபன்.. | Thamarai Selvi Removed From Chinnamarumagal Serial

இதனால் அந்த சிரீயலில் இருந்து என்னை தூக்கிவிட்டு வேறொரு நடிகையை போட்டுவிட்டார்கள். இது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது சரத்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள ஆழி படத்தில் நடிகர் வையாபுரியின் மனைவியாக நடிக்கிறேன்.

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்துள்ளனர். அதில் கலந்து கொள்வதற்காக நானும் என் கணவரும் சென்றிருந்தோம். மலை ஏற வேண்டு, கடலில் குதிக்க வேண்டும், பலவிதமான் சாகசங்கலை செய்ய வேண்டும் என்று பல திகிலான விஷயத்தை கூறினார்கள்.

சீரியலில் இருந்து தூக்க காரணம்..சீரியலும் இல்ல..ரியாலிட்டி ஷோவும் இல்ல!! பிக்பாஸ் தாமரை ஓபன்.. | Thamarai Selvi Removed From Chinnamarumagal Serial

அதற்கும் நானும் என் கணவரும் தயாரி என்றுதான் சொன்னோம். ஆனால் பின் அழைக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று தாமரைசெல்வி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News