தனுஷுடன் திருமண வதந்தி..குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்..எனக்கு ஓகே தான்..ஆனா!! மிருணாள் தாகூர்..

தனுஷுடன் திருமண வதந்தி..குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்..எனக்கு ஓகே தான்..ஆனா!! மிருணாள் தாகூர்..

நடிகர் தனுஷ் - மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஆரம்பத்தில் இருவரும் விளக்கம் அளிக்காத நிலையில், மிருணாள் தாகூர் அதற்கான முற்றுப்புள்ளிவை வைத்திருந்தார். தோ தீவானே ஷெஹர் மேன் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது பேட்டிகளில் தனுஷ் பற்றி கூறி சரியான விளக்கத்தையும் அளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

தனுஷுடன் திருமண வதந்தி..குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்..எனக்கு ஓகே தான்..ஆனா!! மிருணாள் தாகூர்.. | Mrunal Thakur Addressed The Rumours With Dhanush

வேறொரு பேட்டியொன்றில், தனுஷுடன் ரகசிய திருமணம் என்ற செய்தியால் என் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி என் பெற்றோர் தினமும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். என் அப்பா என்னிடம், நீ செட்டிலாக வேண்டும் என்கிறார். நான் உடனே நல்ல மாப்பிள்ளை எங்கே என்று கேட்டேன்.

எனக்கு திருமணம் பற்றி எந்தவித பயமும் இல்லை. ஆனால் எனக்கு பொருத்தமான வரன் அமையவில்லை. திருமணம் என்பது வெறும் சடங்கிற்கு மட்டும் செய்யவேண்டிய ஒன்றில்லை. முன்பு பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், இப்போது நண்பர்கள்கூட இருவரை சேர்த்து வைக்கிறார்கள். எது எப்படியோ காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட திருமணமோ? இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதுவே முக்கியம்.

தனுஷுடன் திருமண வதந்தி..குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்..எனக்கு ஓகே தான்..ஆனா!! மிருணாள் தாகூர்.. | Mrunal Thakur Addressed The Rumours With Dhanush

ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நல்ல தம்பதிகளாக வாழ வேண்டும். குறிப்பாக ஒரு குடும்பத்தின் ஒப்புதலும் மிகவும் அவசியம். ஏனெனில் திருமணமென்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமானதல்ல. அது இரு குடும்த்திற்கும் இடையிலானது என்று கூறியிருக்கிறார். மேலும் தனுஷுடனான வதந்தி குறித்து பேசிய மிருணால், இதை யார் ஆரம்பித்தது என்று எனக்கு தெரியவில்லை, தனுஷுடன் எனக்கு திருமணம் நடந்ததுபோல் உருவாக்கப்பட ஒரு ஏஐ வீடியோவை பார்த்தேன், இது ஒரு பயங்கரமான செயல் என்று மிருணாள் தாகூர் பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News