விஜய் வாழ்க்கையில் சனியன் சகடைகள்..ஆணவபோதையில் இருக்காரு!! பிரபலம் சொன்ன தகவல்..
என் கணவர் விஜய், ஒரு நடிகையுடன் 2021ல் முதல் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். இதனை நான் கண்டுபிடித்து, கண்டித்தும் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார். அவருடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அப்போது அவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருகிறார். அது எனக்கு அவமானத்தை தருகிறது, விஜய் தரப்பில் தனக்கு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுத்தால் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையின் பெயரை கூறுவேன் என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளார் சங்கீதா.
இதுகுறித்து பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி டி செல்வக்குமார் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், சங்கீதா வெளிநாட்டிலிருந்து வந்தப்பெண். தொடக்கத்தில் பயந்த சுபாவம் கொண்டவர். என்னை அண்ணா என்று தான் அழைப்பார். இருவருக்கும் இடையில் நன்றாக உறவு சென்றுக் கொண்டிருந்தது. இடையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
சில சனியன் சகடைகள் வந்தப்பின் விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பங்கள், மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை. பெற்றோர் சந்திரசேகர் - ஷோபாவின் 90வது திருமணநாள் நடந்தபோது விஜய் பங்கேற்கவில்லை.
விஜய் அவரது ரசிகர்களுக்கும் உண்மையாக இல்லை. கரூர் சம்பவத்திற்குப்பின் அங்கிருந்து ஓடிவிட்டார்.

தாய், தந்தை, தயாரிப்பாளர்கள், மேலாளர்கள், மக்கள் என்று யாருக்கும் விஜய் உண்மையாக இல்லை. விஜய்யுடன் தொடக்கத்திலிருந்து நின்றவர்கள் யாருக்கும் உண்மையாக இல்லை, விஜய்க்கு ஆணவபோதை, காலம் பார்த்துக்கொண்டிருக்கிறது. கர்மா சரியாக கொடுக்கும்.
எந்த உச்சத்திற்கு சென்றாலும், கீழே வந்துதான் ஆகவேண்டும். சங்கீதா வெளியில் வந்து பேசுவதே பெரிய விஷயம். அவர் தன்னுடைய மனக்குரலை கொட்டியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் மனைவிக்கு மரியாதையாக இருக்க வேண்டும், ஒரு நடிகரை நம்பி உங்கள் வாழக்கையை வீணாக்கிவிட்டீர்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் பி. டி. செல்வக்குமார்.