விஜய் அண்ணா... நான் வீட்ல இருப்பேன்.. என்னை பழி வாங்குங்க! ஜுலி வெளியிட்ட அடுத்த காணொளி

விஜய் அண்ணா... நான் வீட்ல இருப்பேன்.. என்னை பழி வாங்குங்க! ஜுலி வெளியிட்ட அடுத்த காணொளி

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை பிக்பாஸ் ஜுலி விமர்சித்து காணொளி வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜய், தனது கடைசி படமான ஜனநாயகம் படத்தினை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகினார்.

தற்போது அரசியல் களத்தில் முழுவீச்சாக இறங்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும், இதற்கு விசில் சின்னத்தையும் பெற்றுள்ளார்.

இதனால் இவரது கட்சிக்கூட்டம் ஒவ்வொரு ஊர்களிலும் போடப்பட்டு கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை பார்த்து மற்ற அரசியல் கட்சிகள் சற்று பயத்தில் ஆழ்ந்துள்ளது.

விஜய் அண்ணா... நான் வீட்ல இருப்பேன்.. என்னை பழி வாங்குங்க! ஜுலி வெளியிட்ட அடுத்த காணொளி | Bigg Boss Julie Criticizes Video Tvk Vijay

இதில் கரூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டின் போது 50 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில், விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இது மிகப்பெரிய கேள்வியாக அமைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய் ஜல்லிக்கட்டு காளை குறித்து ஒரு குட்டி கதையினைக் கூறியுள்ளார்.

அவர் கூறிய குட்டி கதையினால் பொங்கி எழுந்த பிக்பாஸ் ஜுலி காணொளியினை வெளியிட்டு விமர்சித்துள்ளார். அதாவது 50 பேர் இறந்தது 50 பேராக இருக்கட்டும் அண்ணே... 500 பேராக ஆக்கிடாத என்று விஜய்யை பேசியிருந்தார்.

ஜுலியின் இந்த காணொளிக்கு விஜய்யின் ரசிகர்கள், அவருக்கு எதிராக பல ட்ரோல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜுலி மீண்டும் ஒரு காணொளியினை வெளியிட்டு விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.

என்னை சார்ந்தவர்களை எதுவும் செய்யாமல் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்... நான் வீட்டுல அல்லது அலுவலகத்தில் இருப்பேன் என்று கூறி பயங்கரமாக பேசியுள்ளார்.

LATEST News

Trending News