Mr X: ஆர்யா, மஞ்சு வாரியர் நடித்த மிஸ்டர் எக்ஸ்.. ஏப்ரல் மாதத்தில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

Mr X: ஆர்யா, மஞ்சு வாரியர் நடித்த மிஸ்டர் எக்ஸ்.. ஏப்ரல் மாதத்தில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: நடிகர் ஆர்யா நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் நீண்ட தாமதங்களுக்குப் பின் இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தேதியை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2023-ல் துவங்கி 2024 ஜூன் வரை படமாக்கப்பட்டது. சமீபத்தில் படத்துக்கு சான்றிதழ் கிடைத்த நிலையில், ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்துள்ளது.

விஷ்ணு விஷாலை வைத்து FIR படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தின் கதை விவரங்கள் இன்றும் ரகசியமாகவே உள்ளன. படத்தின் டீசரில், இந்தியாவில் காணாமல் போன அணு ஆயுதத்தால் செயல்படத் தூண்டப்படும் ரகசிய ஏஜெண்டுகள் காட்டப்பட்டனர். இந்தப் பணியில் ஏஜெண்டுகள் எந்த அளவு நம்பகமானவர்கள் என்பதை படம் ஆராய்கிறது.
 

Arya s Mr X movie release date officially announced

மிஸ்டர் எக்ஸ் படத்தில் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதுல்யா ரவி, ரைசா வில்சன், ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், அனகா உள்ளிட்ட பலரும் இதில் உள்ளனர்.

இயக்குனர் மனு 'மிஸ்டர் எக்ஸ்' ஒரு ஆக்‌ஷன் டிராமா என்றார். "ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் இரு நபர்கள் ஒரு பொதுவான இலக்கை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்களின் முடிவுகளால் ஏற்படும் சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை படம் வெளிப்படுத்தும்," என அவர் விளக்கினார். தந்தை-மகன் உறவின் உணர்வுகளையும் இப்படம் எமோஷனல் உடன் பேசும் என்றார்.

'மிஸ்டர் எக்ஸ்'ஸின் தொழில்நுட்பக் குழுவில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொள்ள, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜிகே இப்படத்தின் பணிகளைக் கவனிக்கிறார். வினீத் ஜெயின், எஸ். லட்சுமண் குமார் தயாரிப்பில், ஏ. வெங்கடேஷ் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். வரும் ஏப்ரல் 17ம் தேதி மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.

சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இந்த வாரம் திரைக்கு வரக் காத்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் அடுத்த வாரமும் திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES