அவரை விட்டு விலகி இருக்க முடியாது.. தனது கணவர் ராஜ் குறித்து பேசிய நடிகை சமந்தா
சமந்தா
நடிகை சமந்தா, இவருக்கு இந்திய சினிமாவில் அறிமுகமே தேவையில்லை. கடந்த 14 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக மா இண்டி பங்காரம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திருமணம்
நடிகை சமந்தாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை நாம் அறிவோம். இதன்பின் பல வேதனைகளை அனுபவித்த சமந்தா, கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் ஈஷா யோகா மையத்தில் நடந்தது. இயக்குநர் ராஜ் நிடிமுரு நடிகை சமந்தாவை வைத்து தி பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் ஆகிய வெப் தொடர்களை இயக்கியுள்ளார்.

விலகி இருக்க முடியாது
இந்த நிலையில், சமந்தா தனது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். "என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றுக்கும் பிறகு, நான் நல்ல மனிதராக மாற என் கணவர் ராஜ்தான் காரணமாக இருந்தார். நாங்கள் வேலை, விளையாட்டு, உடற்பயிற்சி என அனைத்தையும் சேர்ந்துதான் செய்வோம். அதையே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். என்னால் ஒரு நாள் கூட அவரை விட்டு விலகி இருக்க முடியாது. அவர் இருப்பதால் நான் இன்னும் நல்ல நடிகையாகவும் மாறியிருக்கிறேன்" என கூறியுள்ளார்.
