ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி! 3-வது சீசன் எப்போது ரிலீஸ் தெரியுமா
ஹார்ட் பீட்
ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய வெப் சீரிஸ் ஹார்ட் பீட். தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸில் தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

முதல் சீஸனின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஹார்ட் பீட் சீசன் 2 ஆரம்பமானது. முதல் சீசனை போலவே இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் ஹார்ட் பீட் சீசன் 3 எப்போது வரும் என கடந்த ஆண்டிலிருந்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அவர்களின் கேள்விக்கு பதிலாக ஹார்ட் பீட் 3 அப்டேட் வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஹார்ட் பீட் சீசன் 3 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும், ஜூன் 25-ஆம் தேதி ஹார்ட் பீட் சீசன் 3 ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது என ஒரு தகவல் உலா வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ஹார்ட் பீட் சீசன் 3 ஜூன் 25-ஆம் தேதி ஒளிபரப்பப்படாது என்கின்றனர். ஏனென்றால் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு புரோமோவும் இதுவரை வெளிவரவில்லை. இதனால் ஜூன் 25-ஆம் தேதி ரிலீஸ் என்பது சந்தேகமாகவே கூறப்படுகிறது.

மேலும், ஜூலை மாதம் தான் ஹார்ட் பீட் சீசன் 3 ஜியோ ஹார்ட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. விரைவில் புரோமோவை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
