வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்த சிந்தாமணி, கடும் சோகத்தில் மனோஜ்... சிறகடிக்க ஆசை எபிசோட்

வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்த சிந்தாமணி, கடும் சோகத்தில் மனோஜ்... சிறகடிக்க ஆசை எபிசோட்

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது. 

மீனாவின் தம்பி சத்யா மற்றும் சிந்தாமணியின் மகள் ரேகாவும் காதலிக்கிறார்கள், இருவரும் திருமணம் செய்ய தடையாக இருப்பது சிந்தாமணி தான். 

நேற்றைய எபிசோடில், அண்ணாமலை சொன்னதால் மீனா மற்றும் முத்து, ரேகா அம்மா-அப்பா வீட்டிற்கு சென்ற திருமண விஷயத்தை கூற அவர்கள் கடுமையாக சண்டை போடுகிறார்கள். 

ஆனால் முத்து-மீனா, காதலிப்பவர்களை ஒன்றாக சேர்த்து வைப்பது தான் நியாயம் என கூறிவிட்டு செல்கிறார்கள்.

எபிசோட்

தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பேன் என முத்து கூறியது சிந்தாமணியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் தனது கணவர் மற்றும் அடையாட்களுடன் அண்ணாமலை வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு அடியாட்களை வைத்து முத்து குடும்பத்தை மிரட்ட அவர்களும் தைரியமாக எதிர்க்கொள்கிறார்கள். ஒன்னும் இல்லாத பையனுக்கு என் மகளை திருமணம் செய்து வைப்பதா என என்னென்னமோ கூற முத்துவும் சரியான பதிலடி கொடுத்து வந்தார்.

வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்த சிந்தாமணி, கடும் சோகத்தில் மனோஜ்... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial June 26 Episode

ஆனால் கடைசிவரை சிந்தாமணி என் மகள் எங்கே இல்லையென்றால் அவ்வளவு தான் என மிரட்டுகிறார். கடைசியில் சிந்தாமணி இந்த திருமணம் எப்படி தான் நடக்கும் என பார்க்கிறேன் என கூறிவிட்டு செல்ல அண்ணாமலை இவர்களை பார்த்தால் அவர்களது மகளுக்கு நல்லது செய்வது போல் தெரியவில்லை.

நீ ரேகா சத்யாவிற்கு திருமணம் செய்து வை என்கிறார்.

பின் நாளைய எபிசோடின் புரொமோவில், மனோஜ் கடைக்கு வந்து பேசியவர், ரோஹினி, விஜயா என அனைவரையும் யோசித்து கடும் சோகத்தில் உள்ளார், என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் வருத்தமாக உள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES