முத்தக் காட்சிக்கு நோ சொன்ன தமன்னா.. அந்த ஹீரோவுக்கு கிஸ் அடிக்க தயார்.. யார் அந்த நடிகர் தெரியுமா?

முத்தக் காட்சிக்கு நோ சொன்ன தமன்னா.. அந்த ஹீரோவுக்கு கிஸ் அடிக்க தயார்.. யார் அந்த நடிகர் தெரியுமா?

சென்னை: தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தார். திரையில் கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டாத அவர், முத்தக் காட்சிகள் மற்றும் அதிக நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் மட்டும் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருந்தார். அதற்காக பல பட வாய்ப்புகளையே அவர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் தமன்னா, கமர்ஷியல் படங்களிலும், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதேநேரம், ஸ்பெஷல் சாங்ஸ்களிலும் ரசிகர்களை கவர்ந்த அவர், திரையில் எல்லை மீறும் ரொமான்டிக் காட்சிகளுக்கு மட்டும் நீண்ட காலம் 'நோ' சொல்லி வந்தார்.

ஆனால் அந்த முடிவை மாற்றியது Lust Stories 2. அந்த வெப் சீரிஸில் நடிகர் விஜய் வர்மாவுடன் மிகவும் நெருக்கமான மற்றும் முத்தக் காட்சிகளில் நடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், அதன் பிறகு சில ஆண்டுகள் டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. விழாக்கள், வெளிநாட்டு சுற்றுலா என இருவரும் ஜோடியாக பல இடங்களில் நேரம் செலவழித்து வந்தனர், விரைவில் திருமணம் நடக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்துவிட்டனர். பிரிவுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், இருவரும் அதுகுறித்து பெரிதாக எதுவும் பேசவில்லை. அதன் பிறகு தமன்னா மீண்டும் தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், பாலிவுட்டின் கவர்ச்சி வெப் சீரிஸ்களில் ஒன்றாகக் கருதப்படும் Ragini MMS 3-ல் தமன்னா நடிக்க ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இந்த சீரிஸில் அவர் எப்படி தோன்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சர்ப்ரைஸ் பதில்: இந்த சூழலில், பல ஆண்டுகளுக்கு முன்பு தமன்னா அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா தொகுத்து வழங்கிய Sam Jam நிகழ்ச்சியில் ரேபிட் ஃபயர் சுற்றில், "முத்தக் காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் வந்தால் யாருடன் நடிப்பீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு நொடி கூட யோசிக்காமல், "விஜய் தேவரகொண்டாவுடன்" என்று தமன்னா பதிலளித்தார். அந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், நிகழ்ச்சியும் கலகலப்பாக மாறியது.
இதுவரை நடக்கவில்லை: ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள தமன்னா, இதுவரை விஜய் தேவரகொண்டாவுடன் மட்டும் எந்தப் படத்திலும் ஜோடி சேரவில்லை. தற்போது அவரது பழைய பேட்டி மீண்டும் வைரலாகி வருவதால், "இந்த கூட்டணி எப்போது திரையில் இணையப் போகிறது?" என்ற கேள்வியையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
 

LATEST News

Trending News