The Odyssey: டெட்பூல் & வோல்வரின் சாதனையை காலி செய்த நோலன்.. பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!

The Odyssey: டெட்பூல் & வோல்வரின் சாதனையை காலி செய்த நோலன்.. பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!

சென்னை: இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது வித்தியாசமான திரைக்கதை, பிரம்மாண்டமான காட்சியமைப்பு என ஒவ்வொரு படைப்பின் மூலமும் உலக சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருபவர். அந்த வகையில், ஹோமரின் புகழ்பெற்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்டு நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படம் வெளியாகும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தாண்டி, பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்றையே படைத்து வருகிறது.

'தி ஒடிஸி' திரைப்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக அதிக வசூல் செய்த R-Rated (இந்தியாவில் A Rated ) திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு இந்த சாதனையை படைத்த 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படத்தின் வசூல் சாதனையை நோலனின் 'தி ஒடிஸி' முறியடித்துள்ளது.

ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் நடிப்பில் வெளியான 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1.34 பில்லியன் டாலர் வசூலித்து, அதிக வசூல் செய்த R-Rated திரைப்படம் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தது.

சில நாட்களுக்கு முன்பு வரை அந்த சாதனையை முறியடிக்க 'தி ஒடிஸி' திரைப்படத்திற்கு இன்னும் சுமார் 47 மில்லியன் டாலர் வசூல் தேவைப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பால் அந்த இடைவெளியை மிக வேகமாக கடந்து தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம், ஏற்கனவே பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை குவித்து வரும் 'தி ஒடிஸி', தற்போது R-Rated படங்களின் வசூல் ராஜாவாக மாறியுள்ளது.

The Odyssey Christopher Nolan Beats Deadpool amp amp Wolverine to Become Highest-Grossing R-Rated Film Ever

நோலனுக்கு இது புதிய உச்சம்: 'தி ஒடிஸி' திரைப்படத்தின் இந்த சாதனை இன்னொரு காரணத்திற்காகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை நோலன் இயக்கிய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'தி டார்க் நைட் ரைசஸ்' இருந்து வந்தது. Recommended

தற்போது அந்த சாதனையையும் 'தி ஒடிஸி' முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கிறிஸ்டோபர் நோலனின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றுள்ளது. இதனால், ஒரே திரைப்படத்தின் மூலம் தனது சொந்த பாக்ஸ் ஆபீஸ் சாதனையையும் நோலன் முறியடித்திருக்கிறார்.

சர்வதேச மார்க்கெட்டில் வேற லெவல் வரவேற்பு: 'தி ஒடிஸி' படத்தின் வசூலில் சர்வதேச சந்தைகள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றன. இதன் ஒட்டுமொத்த வசூலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொகை சர்வதேச சந்தைகளில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் இப்படத்தின் வசூல் 500 மில்லியன் டாலர்களை கடந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் 780 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேட் டாமன் ஒடிஸியஸ் கதாபாத்திரத்தில் நடிக்க, டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதுவும் படத்தின் மீதான சர்வதேச எதிர்பார்ப்பை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

IMAX-ல் மட்டும் இத்தனை கோடியா?: 'தி ஒடிஸி' படத்தின் பிரம்மாண்டமான வசூலுக்கு IMAX திரையிடல்களும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. முழுமையாக IMAX கேமராக்களை பயன்படுத்தி படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் IMAX திரையிடல்கள் மூலமாக மட்டும் 280 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 70mm IMAX காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் பல இடங்களில் முன்கூட்டியே விற்றுத் தீர்ந்ததால், இப்படத்தின் சிறப்பு திரையிடல்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலும் வசூல் வேட்டை: உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் 'தி ஒடிஸி' திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இப்படத்தின் வசூல் ஏற்கனவே ரூ.200 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் படத்தின் இந்திய வசூலுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சீனாவிலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியிருப்பதால், சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூல் இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிரான்சைஸ் இல்லாமல் இப்படியொரு சாதனையா?: 'தி ஒடிஸி'யின் இந்த சாதனைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இன்றைய பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் படங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே பிரபலமான கதாபாத்திரங்கள் அல்லது ஃபிரான்சைஸ்களை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன.

ஆனால், 'தி ஒடிஸி' எந்தவொரு முந்தைய படத்தின் தொடர்ச்சியும் கிடையாது. ஸ்பின்-ஆஃப் படமும் கிடையாது. ஏற்கனவே இருக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் அடிப்படையிலும் உருவாகவில்லை. அப்படியிருக்க, ஒரு பழமையான கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட R-Rated திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் இந்த அளவுக்கு மிகப்பெரிய வசூலை குவித்திருப்பது ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

2026-ம் ஆண்டின் பாக்ஸ் ஆபீஸ் தரவரிசையிலும் 'தி ஒடிஸி' தற்போது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் நோலனின் கற்பனை, மறுபக்கம் ஹோமரின் காவியம், அதற்கு மேல் மேட் டாமன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் என உருவான 'தி ஒடிஸி', தற்போது வசூலில் 'டெட்பூல் & வோல்வரின்' படத்தையே பின்னுக்குத் தள்ளி புதிய வரலாறு படைத்துள்ளது.

Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.

LATEST News

Trending News