Bethlehem Kudumba Unit (மலையாளம்) திரை விமர்சனம்

Bethlehem Kudumba Unit (மலையாளம்) திரை விமர்சனம்

நிவின்பாலி, மமிதா பைஜு நடிப்பில் பீல் குட் புகழ் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த Bethlehem Kudumba யூனிட் படமும் பீல் குட் படமாக அமைந்ததா? பார்ப்போம்.

 

கதைக்களம்

நிவின் பாலி ஊரில் நண்பர்களுடன் கேண்ட்ரிங் வைத்து நடத்தி வருபவர். நிவின் பாலி இருக்கும் ஊருக்கு வேண்டா வெறுப்பாக பிடிக்காமல் தான் மமிதா பைஜு வருகிறார்.

அங்கு வந்ததும் அவருக்கு என சில ப்ரண்ட்ஸ் கிடைக்கின்றனர், அவர் பின்னால் சுற்ற ஒரு பையன், கல்லூரி வாழ்க்கை என சந்தோஷமாக இருக்கிறார்.

 

Bethlehem Kudumba Unit (மலையாளம்) திரை விமர்சனம் | Bethlehem Kudumba Unit Movie Review

அப்போது நிவின் செய்வதை பார்ப்பது, அவரை பற்றி கேள்விபடும் விஷயங்கள் என மமிதாவிற்கு முதலில் இரு ஈர்ப்பு நிவின் மீது வருகிறது, அந்த ஈர்ப்பு காலபோக்கில் காதலாக மாறுகிறது.

மமிதாவும் தன் காதலை சொல்ல, முதலில் தயங்கும் நிவின் பிறகு அவரும் ஓகே சொல்ல, ஆனால் இருவருக்கும் 12,13 வயது வித்தியாசம் என்பதால் இவர்கள் காதல் கைக்கூடியதா, இதை வீட்டில் ஏற்றார்களா என்பதை செம கலகலப்பாக கூறியுள்ளார் இயக்குனர் கிரிஷ்.

Bethlehem Kudumba Unit (மலையாளம்) திரை விமர்சனம் | Bethlehem Kudumba Unit Movie Review

படத்தை பற்றிய அலசல்

நிவின் பாலி..சார் இது தான் உங்க ரூட்டு, வாங்க இப்படி பீல் குட் ஜானருக்கு என்று சொல்லும்படி படம் முழுவதும் கலக்கியுள்ளார், அவரின் ஒன் லைன் கவுண்டர், ஸ்டைலாக கார்-யை ஓட்டுவது, மமிதாவுடன் பயந்து பயந்து காதலிப்பது என மனுஷன் செம ஸ்கோர் செய்துள்ளார்.

மமிதா தொட்டதெல்லாம் தங்கம் தான் போல, போன வாரம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வர, இந்த வாரம் பெத்லகேம் குடும்ப யூனிட் என பேக் டூ பேக் சிக்ஸ் தான் அடித்துள்ளார், நிவினிடம் தைரியமாக காதலை சொன்னதொடு, தைரியமாக அவருடன் பல இடங்களுக்கு நிவினே பயந்தாலும், அவர் தைரியமாக அழைத்து செல்வது கடைசி வரை என் காதலன் இவர் தான் என பிடிவாதம் இருப்பது என சூப்பர் மமிதா.

 

Bethlehem Kudumba Unit (மலையாளம்) திரை விமர்சனம் | Bethlehem Kudumba Unit Movie Review

இதை தாண்டி படத்தில் நடித்த அனைவருமே குறும்பட இயக்குனர், மகிதாவின் ஒருதலை காதலன், நிவின் பாலியுடன் வரும் வயது அதிகமான நண்பர், நிவின் பாலி தோழிகள் என எல்லோருமே கலக்கல் தான். படத்தின் மிகப்பெரிய பலம் ஒன் லைன் கவுண்டர் வசனங்கள் தான்.

அதிலும் படத்தின் முதல் பாதி முழுவதும் சிரிப்பு சரவெடி தான். கண்டிப்பாக ஆங்கில சப் டைட்டில் இருக்கிறதா என்று மலையாளம் தெரியாதவர்கள் கேட்டு செல்வது நலம்.

Bethlehem Kudumba Unit (மலையாளம்) திரை விமர்சனம் | Bethlehem Kudumba Unit Movie Review

இத்தனை கலகலப்பாக சென்ற முதல் பாதியை தொடர்ந்து இரண்டாம் பாதியும் செம ஜாலியாகவே செல்கிறது, இருந்தாலும் அங்கங்கே கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது, ஆனால் அது பெரிய குறையாக தெரியவில்லை. கிளைமேக்ஸ் அந்த காந்தாரா போல் வந்த சண்டை எல்லாம் காமெடி என்றாலும் இது தேவையா என்பது போல் இருந்தது.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அத்தனை யதார்த்தம், நாமே அந்த ஊருக்குள் சுற்றி வந்த உணர்வு, பாடல்கள் இசை அடிபொலி தான், கொஞ்சம் ப்ரேமலு பாதிப்பு இதிலும் தெரிவதை தவிர்த்து இருக்கலாம்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை

நடிகர், நடிகைகள் பங்களிப்பு

ஒன் லைன் காமெடி

வசனங்கள்

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி சில இடங்கள் இன்னும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கலாம்

மொத்தத்தில் இந்த பெத்லகேம் குடும்ப யூனிட் குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் படம். 

Bethlehem Kudumba Unit (மலையாளம்) திரை விமர்சனம் | Bethlehem Kudumba Unit Movie Review

LATEST News

Trending News