இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம்

இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம்

ஹாலிவுட் ஹாரர் படங்களில் மிரள வைக்கும் இன்ஸிடியஸ் சீரிஸின் அடுத்த படமான 'இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர்' எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

தனது தாய் தன் கண்ணே முன்னேயே தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்த ஜெம்மா, அவரது நினைவுகளை சுமக்கும் வகையில் பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். பல் மருத்துவரான ஜெம்மா, தனது மகள் மாயாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

சல்லிவன்ஸ் என்ற வயதான அண்டை வீட்டு தம்பதியினர் ஜெம்மாவுடன் நட்பு ரீதியில் உள்ளனர். தன் பாட்டியைப் பற்றி மாயா மேலும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஜெம்மா முற்பட, ஒருநாள் அவருக்கு தாய் உதவி கேட்பது போல் கனவு வருகிறது.

இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம் | Insidious Out Of The Further Movie Review

அதே சமயம் வயதான மூன்று பேர் காலை வேளையில் விசித்திரமாக பெட்டிகளுடன் நடந்து செல்வதை ஜெம்மா காண்கிறார். அவர்கள் ஜெம்மாவின் கனவில் வந்து பயமுறுத்த, அவருக்கு நிஜ உலகில் ஒரு பொருள் கிடைக்கிறது. பின்னர் அந்த மூவரில் ஒரு முதியவர் ஜெம்மாவின் மருத்துவமனைக்கு அவரிடமே சிகிச்சைக்காக வருகிறார்.

அவரை பரிசோதிக்கும்போது திகிலான ஒரு நிகழ்வு நடக்க ஜெம்மா பயத்தில் உறைந்துபோகிறார். பிறகு ஒரு ஆன்மா மூலம் அவருக்கு தன்னைப் பற்றிய ஒரு விஷயம் தெரிய வருகிறது. அதன் பின்னர் அந்த மூவர் யார்? தன்னை கனவில் தொந்தரவு செய்யும் நபருக்கு என்ன வேண்டும்? அதனை எப்படி ஜெம்மா முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.

இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம் | Insidious Out Of The Further Movie Review

படம் பற்றிய அலசல்

இன்ஸிடியஸ்: தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சியாக இந்த இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர் திரைப்படத்தை ஜேக்கப் சேஸ் என்பவர் இயக்கியுள்ளார். இன்ஸிடியஸ் திரைப்படங்களுக்கே உரித்தான திகிலான காட்சிகள் ஆங்காங்கே நம்மை பயமுறுத்த முதல்பாதி நகர்கிறது.

ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு ஒரு சக்தி இருக்கிறது என்று தெரிந்த பின்னர் திரைக்கதை வேகமெடுக்கிறது. சில முடிச்சுகள் அவிழும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக எதற்காக இதெல்லாம் நடக்கின்றன என்ற விஷயம் தெரிய வரும் காட்சி மிரள வைக்கிறது.

இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம் | Insidious Out Of The Further Movie Review

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்திற்கு முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வல் திரைப்படங்கள்.. பட்டியல் இதோ

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்திற்கு முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வல் திரைப்படங்கள்.. பட்டியல் இதோ

கிளைமேக்ஸில் ஹீரோயின் செய்யும் ஒரு விஷயம் அட என்று வியக்க வைக்கிறது. முதல் பாதியில் ஹீரோயின் பயமுறுத்தப்படும் காட்சிகள் அடுத்தடுத்து வருவது பொறுமையை சோதிக்கின்றன.

ஜெம்மாவாக எமிலியா ஈவ் அட்டகாசமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான நடிப்பதை தந்துள்ளார். அவரது மகளாக நடித்திருக்கும் ஐலேண்ட் ஆஸ்டினும் சிறப்பான நடித்துள்ளார். ஏனைய நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சரியான முறையில் தந்துள்ளனர். படத்தின் திரைக்கதை வலுசேர்ப்பது பின்னணி இசைதான்.

இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம் | Insidious Out Of The Further Movie Review

அந்த பணியை ஜோஸப் பிஷாரா மிகச்சிறப்பாக செய்துள்ளார். படத்தொகுப்பாளர் கிரேகோரி, முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். டேவ் கார்பெட்டின் ஒளிப்பதிவு அருமை.

க்ளாப்ஸ்

எமிலியா ஈவின் நடிப்பு

முடிச்சுகள் அவிழும் காட்சிகள்

கிளைமேக்ஸ்

திகில் மொமெண்ட்ஸ்

பல்ப்ஸ்

முதல் பாதியின் கனவு காட்சிகள் திரும்ப திரும்ப வருவது

மொத்தத்தில் திகில் பட விரும்பிகளை ஈர்க்கும் வகையில் இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர் அமைந்துள்ளது. திரையரங்கில் ரசிக்கலாம்.

இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம் | Insidious Out Of The Further Movie Review

LATEST News

Trending News

HOT GALLERIES