அண்ணே நீங்க பண்ணுங்கண்ணே!.. தேவாவுக்கு ராமராஜன் கொடுத்த முதல் பட வாய்ப்பு!..
அண்ணே நீங்க பண்ணுங்கண்ணே!.. தேவாவுக்கு ராமராஜன் கொடுத்த முதல் பட வாய்ப்பு!..
திரையுலகில் நடிகரானாலும் சரி.. இசையமைப்பாளர் என்றாலும் சரி.. இயக்குனர் என்றாலும் சரி.. வாய்ப்பு அவ்வளவு சுலபத்தில் கிடைத்து விடாது.. பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..
இளையராஜாவுக்கு கூட சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பு உடனடியாக கிடைத்துவிடவில்லை.. அவரின் திறமையை கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் புரிந்து கொண்டதால் அது நடந்தது. இசையமைப்பாளர் தேவாவும் தமிழ் சினிமாவில் பல வருடங்கள் போராடி 40 வயதுக்கு மேல்தான் இசையமைப்பாளராகவே அறிமுகமானார்..
தூர்தர்ஷனில் பணிபுரிந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துவது,, சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு தேடுவது என போராடி வந்தார் தேவா. நடிகர் சந்திரசேகர் நடித்த மாட்டுக்கார மன்னாரு என்கிற படத்தில் சி.தேவா என்கிற பெயரில் இசையமைத்தார். அதுதான் தேவாவின் முதல் திரைப்படம்.
அந்த படத்திற்கு பின் ராமராஜன் நடித்த மனசுக்கேத்த மகராசா படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு தேவாவுக்கு வந்தது. ஆனால் தேவா வேண்டாம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை தெரிந்து கொண்ட தேவா நேராக ராமராஜனிடம் சென்று ‘உங்கள் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு வருகிறது.. ஆனால் சிலர் தடுக்கிறார்கள்.. நீங்கள் சொன்னால் என்னை ஓகே செய்து விடுவார்கள்’ என்று கூற ராமராஜன் ‘அண்ணே.. நீங்க பண்ணுங்கண்ணே’ என்று சம்மதம் தெரிவித்தார். அதோடு சி.தேவா என்ற போட வேண்டாம்.. தேவா என்று மட்டும் போடுங்கள் என்று தேவாவிடம் சொன்னதும் ராமராஜன்தான்..
தேவா இசையமைத்த மனசுக்கேத்த மகராசா திரைப்படம் 1989ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார்.