அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா விவகாரம் – போலீஸ் விசாரணைக்குப் பிறகு பயில்வான் சொன்ன அதிரடி வார்த்தை!
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நடிகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதனிடம் சென்னை சைபர் கிரைம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஐஸ்வர்யா மற்றும் நடிகர் உமாபதி ராமையா ஆகியோரின் திருமண வாழ்க்கை குறித்து அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, ஐஸ்வர்யா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனப் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் காணொளியில் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, தனது மகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் அர்ஜுன் கடந்த நவம்பர் 19ஆம் திகதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.