6 நாட்களில் ரூ.109 கோடி வசூல்... உலகளவில் சாதனை படைத்த தனுஷின் ஓம் திரைப்படம்!
நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஓம் (O.M: Operation Mole) திரைப்படம், ஆறு நாட்களில் உலகளவில் ரூ.109 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான முதல் திரைப்படமாக கருதப்படும் ஓம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், வெளியான பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனால் முதல் மூன்று நாட்களுக்குப் பின்னர் திரைப்படத்தின் வசூலில் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆறு நாட்களைக் கடந்துள்ள ஓம் திரைப்படம் உலகளவில் மொத்தம் ரூ.109 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த வசூல் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை அல்ல என்றும், சினி உலகம் தரப்பில் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட மதிப்பீடுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்தடுத்த நாட்களில் திரைப்படத்தின் வசூல் எவ்வாறு அமையும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.