“திருப்பரங்குன்றம் முருகா... சோதனையை கொடுத்துட்டு சந்தோஷத்தையும் கொடுத்துட்ட!” – உச்சநீதிமன்ற உத்தரவால் சரவெடி வெடித்த இயக்குநர் மோகன் ஜி!

“திருப்பரங்குன்றம் முருகா... சோதனையை கொடுத்துட்டு சந்தோஷத்தையும் கொடுத்துட்ட!” – உச்சநீதிமன்ற உத்தரவால் சரவெடி வெடித்த இயக்குநர் மோகன் ஜி!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி தனது மகளுடன் சரவெடி வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளார்.

திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மோகன் ஜி, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தொடர்ந்து தனது ஆதரவை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 24ஆம் திகதி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. எனினும், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததால் விவகாரம் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்றது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 27ஆம் திகதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், நவம்பர் 28ஆம் திகதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும், கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்ததுடன், பாதுகாப்புப் பணிகளை மத்திய ரிசர்வ் பொலிஸ் படையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து மகிழ்ச்சியடைந்த மோகன் ஜி, தனது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “முருகா, எப்போதுமே நீ சோதனையைக் கொடுத்துட்டு அதற்குப் பிறகுதான் சந்தோஷத்தைக் கொடுப்பாய். தீபம் விஷயத்திலும் அப்படித்தானே. தற்போது தீபம் ஏற்றப்பட உள்ளது” எனக் கூறியுள்ளார்.

LATEST News

Trending News