“குரங்குகளை மனிதர்களுடன் ஒப்பிடாதீர்கள்!” – சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை திரிஷா வெளியிட்ட அதிரடி இன்ஸ்டா ஸ்டோரி!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா தற்போது தனது சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.
சமீபகாலமாக திரிஷாவின் அரசியல் தொடர்பான செய்திகள் மற்றும் நடிகர் விஜய்யுடனான நட்பு குறித்த பல்வேறு விவாதங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். முதலாவது பதிவில் பிரம்மாண்டமான கோயில் கோபுரத்தின் முன்னால் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து அதற்கு 'Divine' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக, மரத்தின் மீது அமர்ந்திருக்கும் குரங்குகளின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், “Let's never compare monkeys to people” எனப் பதிவிட்டுள்ளார். அதாவது, குரங்குகளை ஒருபோதும் மனிதர்களுடன் ஒப்பிட வேண்டாம் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், திரிஷா யாரை நோக்கி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக, அவரைச் சுற்றி அண்மைக்காலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் தனிப்பட்ட சர்ச்சைகளுடன் இந்தப் பதிவு தொடர்புடையதாக இருக்குமா எனப் பலரும் விவாதித்து வருகின்றனர்.
எனினும், தனது பதிவுகள் யாரைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டவை என்பதை திரிஷா வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இதனால் இந்த இன்ஸ்டா ஸ்டோரிகள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.