ஹரி-அருண்விஜய் படத்தின் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

ஹரி-அருண்விஜய் படத்தின் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அருண்விஜய்யின் 32வது படமான இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் ஒரு கிராமத்து பின்னணி கொண்ட அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 32 திரையுலக பிரபலங்கள் வெளியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’யானை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES