நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா: வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா: வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என காமெடி நடிகர் வடிவேலுவுக்கு பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் பல்வேறு தடைகளை தகர்த்து தற்போது மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி செய்துள்ள வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் 'கிங்'

சேரன் நடித்த ’வெற்றி கொடி கட்டு’ என்ற படத்தில் வடிவேலு துபாயில் இருந்து திரும்பிய நபராக நடித்திருப்பார் என்பதும் அந்த படத்தில் அவரது காமெடி அந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES