பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து பாடிய ஷிவாங்கி!

பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து பாடிய ஷிவாங்கி!

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி தற்போது பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து பாடியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரையுலகில் தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் அவர்களில் ஒருவர் ஷிவாங்கி என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் ஒரு சில திரைப்படங்களில் பாடல்களும் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்புவுடன் ஒரு பாடலை ஷிவாங்கி பாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜேஷ் கண்ணா என்பவரின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாயன். இந்த திரைப்படத்தில் சிம்பு, ‘மச்சி’ என்று தொடங்கும் பாடலை பாடி உள்ள நிலையில் அவருடன் இணைந்து ஷிவாங்கியும் பாடியுள்ளார். இது ஒரு டூயட் பாடல் என்றும் இந்த பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘மாயன்’ திரைப்படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி இணைந்து நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES