விஷாலின் 32, 33, 34வது படங்கள் குறித்த தகவல்கள்!

விஷாலின் 32, 33, 34வது படங்கள் குறித்த தகவல்கள்!

விஷால் நடித்து முடித்துள்ள 31வது திரைப்படமான’ எனிமி’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஷாலின் 32, 33, 34வது படங்கள் குறித்த தகவல்கள் தற்போது பார்ப்போம்.

விஷாலின் 32வது படத்தை வினோத் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷாலின் 33வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஒரு ஆக்சன் மற்றும் திரில்லர் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் விஷாலின் 34வது படத்தை கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’அடங்கமறு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலின் அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு மட்டுமே அவரது நான்கு படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES