என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க!! கரூர் சம்பவத்தால் உடைந்த தவெக தலைவர் விஜய்..

என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க!! கரூர் சம்பவத்தால் உடைந்த தவெக தலைவர் விஜய்..

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், கடந்த சனிக்கிழமை, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பிரச்சார கூட்டம் நடத்தினார். அதில், கரூரில் பிரச்சாரம் செய்தபோது சம்பவ இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோகச் செய்தியால் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விஜய் மீது பல விமர்சனங்களும் கண்டனங்களும் அதிகரித்து வந்தது.

என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க!! கரூர் சம்பவத்தால் உடைந்த தவெக தலைவர் விஜய்.. | Vijay Video Statement On Karur Stampede Incident

முதலமைச்சர் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து விமர்சித்து வந்த நிலையில், விஜய் தற்போது ஒரு வீடியோ மூலம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வேதனையான ஒரு வலியை பார்த்தது இல்லை. மனதில் இருக்கும் வலி, வலி மட்டும் தான். என்மீது பாசமாக இருந்த மக்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

சி எம் சார், பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம் என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News