கல்லுளி மங்கனாக மாதம்பட்டி ரங்கராஜ்... நிறைமாத கர்ப்பிணியாக போராடும் ஜாய் கிரிஸில்டா!

கல்லுளி மங்கனாக மாதம்பட்டி ரங்கராஜ்... நிறைமாத கர்ப்பிணியாக போராடும் ஜாய் கிரிஸில்டா!

தந்தையாக இருந்து குழந்தையை பாதுகாப்பதற்கு பதிலாக வலிக்க வைத்தாய்...ஒரு நாள் அந்த குழந்தையின் கண்ணீரே உனக்கு தண்டனையாக மாறும்.என குறிப்பிட்டு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள வலி நிறைந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

கல்லுளி மங்கனாக மாதம்பட்டி ரங்கராஜ்... நிறைமாத கர்ப்பிணியாக போராடும் ஜாய் கிரிஸில்டா! | Joy Crizildaa New Post About Mathampatty Rangaraj

ஆனால் இவரின் எல்லா புகழையும் சீர்குலைக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.

கல்லுளி மங்கனாக மாதம்பட்டி ரங்கராஜ்... நிறைமாத கர்ப்பிணியாக போராடும் ஜாய் கிரிஸில்டா! | Joy Crizildaa New Post About Mathampatty Rangaraj

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்காததன் காரணமாக ஜாய்க்கு ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

அதனை தொடர்ந்து தனது பயோவில், Law Student என்பதை சேர்த்திருக்கிறார் ஜாய் கிரிஸில்டா. இந்த விடயம் குறித்து ஜாய்க்கு இணையத்தில் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

கல்லுளி மங்கனாக மாதம்பட்டி ரங்கராஜ்... நிறைமாத கர்ப்பிணியாக போராடும் ஜாய் கிரிஸில்டா! | Joy Crizildaa New Post About Mathampatty Rangaraj

ஜாய் கிரிஸில்டாவுக்கு குழந்தை பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ஒரு நாள் இந்த குழந்தையின் கண்ணீர் உனக்கு தண்டனையாக மாறும் என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

LATEST News

Trending News