சினிமாவிற்கு டாடா சொல்லும் பிக்பாஸ் 9 புகழ் அரோரா... ஏன்னா?
சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல நடிகைகள் முதலில் மாடலிங் துறையில் களமிறங்கி படிப்படியாக முன்னேற முயற்சிக்கிறார்கள்.
அப்படி சினிமா ஆசையில் மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டும், ஆல்பம் பாடல்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக வலம் வந்தவர் தான் அரோரா. இவர் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொண்ட பிறகு தமிழக மக்களிடம் நன்கு பிரபலமாகிவிட்டார்.

பிக்பாஸ் 9 பிறகு அதிக போட்டோ ஷுட்கள் நடத்தி வந்த அரோரா இன்னும் சில மாதத்தில் சினிமாவில் இருந்து விலக உள்ளாராம்.
Polland சென்று தனது படிப்பை தொடர உள்ளாராம், அங்கு படிக்க முயற்சி செய்து வருவதாகவும் அரோரா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.