கோமாவுக்கு சென்ற நடிகை முமைத் கான்!! தற்போது எப்படி இருக்காரு தெரியுமா?

கோமாவுக்கு சென்ற நடிகை முமைத் கான்!! தற்போது எப்படி இருக்காரு தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பிரபலமாக இருந்த அவர் திடீரென படங்களில் நடிக்கவில்லை. 30 வயதில் விபத்தில் சிக்கிய நடிகை முமைத் கானுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கோமாவுக்கு சென்றுவிட்டாராம்.

கோமாவுக்கு சென்ற நடிகை முமைத் கான்!! தற்போது எப்படி இருக்காரு தெரியுமா? | Mumait Khan After 7 Years Back Dance Video

15 நாட்கள் கோமாவில் இருந்த அவர் அதன் பின் சுயநினைவுக்கு வந்துள்ளார். சுயநினைவுக்கு வந்தாலும், அவர் மூளையில் 5 நரம்புகள் வெடித்ததனால் அவர் 7 வருடங்களுக்கு எந்த வேலையும் செய்ய கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.

சின்ன வெயிட் கூட தூக்க கூடாது, வலிப்புக்காக 7 வருடங்களாக மருந்துகள் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய முமைத் கான் தற்போது ஹைதராபாத்தில் மேக்அப் மற்றும் ஹேர் ட்ரெஸ்ஸிங் பயிற்சி இன்ஸ்டிடுயூட் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறாராம்.

சமீபத்தில் முமைத் கான் அளித்த பேட்டியொன்றில், சில ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருக்கும் பெட்டிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது. இதனால் மூளைக்கு செல்லும் 5 நரம்புகள் வெடித்ததால் 15 நாட்கள் கோமாவில் இருந்தேன்.

கோமாவுக்கு சென்ற நடிகை முமைத் கான்!! தற்போது எப்படி இருக்காரு தெரியுமா? | Mumait Khan After 7 Years Back Dance Video

படுத்தப்படுகையாக இருந்தேன். ஆனால் கோமாவிலிருந்து மீண்டுவிட்டாலும், 7 ஆண்டுகள் எந்த வேலையும் செய்ய வேண்டம், பழையபடி வேலை, செய்யவோ, கனமான பொருட்கள் தூக்கவோ கூடாது என்று மருத்துவர்கள் கூறினர். அதனால் எதையும் செய்யாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். 7 ஆண்டுகளில் என்னை நானே தெரிந்து கொண்டேன்.

என்னை முமைத் கானாக அழகு பார்த்த கடவுளே, பின் என் கெரியருக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். இதனையடுத்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து பாடல்களுக்கு ஆட்டம் போட்டு எடுத்த ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

LATEST News

Trending News