கமலுடன் நடிக்க ரஜினிகாந்த் வாங்கப்போகும் சம்பளம் இத்தனை கோடியா!! தலைவர்னா சும்மாவா...
தமிழ்நாட்டை தாண்டி இந்தியளவில் உலகளவில் ரசிகர்கள் கொண்ட நட்சத்திரங்களாக இருப்பவர்கள் தான் ரஜினிகாந்த் - கமல் ஹாசன். ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கிற்கு பின் பல வருடங்களுக்கு பின் ரஜினிகாந்த் கமலுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளார்.

தலைவர் 174 X KH 238 என பெயரிப்பட்ட இப்படத்திற்காக ரஜினிகாந்த் தன்னுடைய லுக்கையை மாற்றி அதற்காக தயாராவிட்டார்.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அப்படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு சுமார் ரூ. 225 கோடி சம்பளம் வாங்கவுள்ளாராம்.
படத்திற்காக ஒரு பிரமோ வீடியோ ஷூட் முடிக்கப்பட்டதாகவும் இருவரும் 80களின் விண்டேஜ் ஸ்டைலில் தோன்றவுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பநிதி தயாரிக்கவுள்ளார் என்றும், ஸ்ருதி ஹாசன், செளந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் இணை தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றவுள்ளார்களாம். ஏற்கனவே கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.