என் படத்தை ஓட வெச்சதே நீதான் ம்மா.. 90ஸ் மாளவிகாவிடம் ஓபனாக சொன்ன மிஷ்கின்
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது நடிப்பதிலும் செம பிஸியாக இருக்கிறார். டிராகன் படத்தில் அவர் ஏற்றிருந்த கல்லூரி முதல்வர் கேரக்டரை அவ்வளவு சிறப்பாக செய்திருந்தார். இயக்கத்தை பொறுத்தவரை விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த வருடத்தில் படம் ரிலீஸாகிவிடும் என தெரிகிறது. இந்நிலையி எல்ஐகே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். அவர் தனது புதுமையான திரை மொழி மூலம் முதல் படத்திலிருந்தே ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அதேசமயம் அவர் அப்படியே ஹாலிவுட் படங்களை பார்த்து காப்பி அடித்துதான் தன்னுடைய படங்களை உருவாக்குகிறார் என்ற விமர்சனங்கள் எழாமல் இல்லை. அதற்கு முடிந்த அளவு தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்துவிட்டார். என்னதான் அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் கண்டிப்பாக அவர் சூப்பர் படைப்பாளி என்பதில் மாற்று கருத்து இல்லை.

மிஷ்கினின் ட்ரெய்ன்: இப்போது அவர் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரை வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஏற்கனவே பிசாசு 2 படத்தில் சேதுபதி கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். இப்போது மிஷ்கின் இயக்கத்தில் முதல்முறையாக ஹீரோவாகியிருப்பதால் இந்தப் படத்தில் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பெரிய மேஜிக்கை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்த வருடத்துக்குள் படமானது ரிலீஸாகிவிடும் என தெரிகிறது.
நடிகராக பிஸி: இதற்கிடையே நடிகராகவும் கலக்கிவருகிறார் அவர். ஏற்கனவே நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என தான் இயக்கிய படங்களில் மட்டும் நடித்துவந்தார். கடந்த சில வருடங்களாகவே மற்றவர்கள் இயக்கத்திலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த மாவீரன், லியோ, டிராகன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன. முக்கியமாக டிராகன் திரைப்படத்தில் அவர் தனது ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பை பார்த்து அனைவருமே உச்சக்கட்ட ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
ட்ரெண்டாகும் பேச்சு: இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல்ஐகே திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிஷ்கினும் கலந்துகொண்டார். அதில் 90ஸ் நடிகை மாளவிகா உள்ளிட்டோரும் பங்கேற்றார்கள். அப்போது மாளவிகாவை பார்த்து மிஷ்கின், "ரொம்ப நாட்கள் கழித்து மாளவிகாவை பார்க்கிறேன். என்னுடைய படத்தை ஓட வைத்ததே நீதான் ம்மா. வாள மீனு, விலாங்கு மீனு" என்றார். அதை கேட்டு மாளவிகா வெட்கத்தில் சிரித்துவிட்டார். இப்போது இந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
செம பாடல்: முன்னதாக, சித்திரம் பேசுதடி படம்தான் மிஷ்கினுக்கு முதல் படம். அந்தப் படத்தில் வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் ரிலீஸ் சமயத்தில் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அதி மஞ்சள் நிற புடவை அணிந்து ஆடியிருந்தார் மாளவிகா. அந்தப் பாடலும், படமும் ஹிட்டடித்ததால் அடுத்தடுத்த மிஷ்கின் படங்களில் கட்டாயம் மஞ்சள் சேலை கட்டி ஒரு பெண் ஆட வேண்டும் என்ற சென்ட்டிமென்ட்டை தயாரிப்பாளர்கள் சொல்ல; வேறு வழியில்லாமல் மிஷ்கினும் அதே மாதிரி பாடல்களை படத்தில் வைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.