Suriya Speech: உச்சகட்ட நம்பிக்கையில் இருக்கும் சூர்யா.. கருப்பு இசை வெளியீட்டு விழா ஸ்பீச்!

Suriya Speech: உச்சகட்ட நம்பிக்கையில் இருக்கும் சூர்யா.. கருப்பு இசை வெளியீட்டு விழா ஸ்பீச்!

சென்னை: சூர்யா - த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. இயக்குநர் RJ பாலாஜி எழுதி இயக்கியது மட்டுமல்லாமல், படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. அதில் சூர்யா பேசியது படத்தின் இயக்குநர் RJ பாலாஜி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் பேசுகையில்," "மதுரை மண்ணுக்கும் அன்புக்கும் நான் கடன் பட்டிருக்கேன். மதுரை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்! இங்க இருக்கிற சாப்பாடு, அரசியல், அப்புறம் 'பெண் தெய்வங்கள்' மேல நீங்க வச்சிருக்க மரியாதை.. எல்லாமே அற்புதம். இந்த மண்ணுல நான் நிறைய படங்கள் பண்ணிருக்கேன். மதுரை மண்ணுக்கு நான் எப்பவுமே கடன் பட்டிருக்கேன். கடந்த 28 வருஷமா என்னை ஒரு ஹீரோவா ஆக்குனது உங்களோட இந்த அன்பும் பாசமும் தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. மதுரை சித்திரை திருவிழாவிற்கு 5 லட்சம் பேர் வருவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.இப்போ இந்த கருப்பு திருவிழாவை பார்க்கும் போது, இது மதுரைக்கு இன்னொரு சித்திரை திருவிழா மாதிரிதான் எனக்குத் தெரியுது.

நடிகர் இந்திரன்ஸ் ஒரு மிகப்பெரிய திறமைசாலி. தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது.அவர் நான்காம் வகுப்பு வரைதான் படித்திருந்தார், ஆனால் இப்போது தனது விடா முயற்சியால் 7-ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதியுள்ளார். அவரது அர்ப்பணிப்புக்கு எல்லையே இல்லை.
 

Suriya Speech at Karuppu Audio Launch Actor Expresses Strong Confidence Ahead of Release

1000 டியூன்: சாய், நீ ஒரு மிகச்சிறந்த திறமைசாலி. உனக்கு ஒரு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதலில் சந்தித்தபோது, ஒரு நாளைக்கு 1000 டியூன்ஸ் வரை போடுவேன் என்றார். அவர் ஒரு இசை அரக்கன். படம் திரைக்கு வரும்போது, இசையமைப்பில் அது ஒரு மாஸான அனுபவமாக இருக்கும்.

என்னை விட: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஒரு பிரம்மாண்டமான தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். இந்தப் படத்திற்கான உலகத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளனர். என்னை விட எனக்காக அதிகம் யோசிப்பவர்கள் ட்ரீம் வாரியர். அன்பறிவ் மற்றும் விக்ரம் மாஸ்டர்களுக்கு பெரிய நன்றிகள். படத்தில் அவர்களின் ஸ்டண்ட் காட்சிகள் மிரட்டலாக வந்திருக்கிறது.

Suriya Speech at Karuppu Audio Launch Actor Expresses Strong Confidence Ahead of Release

கருப்பசாமி துணை: கருப்பசாமி கடவுள் தான் இந்தப் படத்தை இந்தத் தூரம் கொண்டு வந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். கடவுளின் அருள் ஒருவருக்குக் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை நான் கண் கூடாகப் பார்க்கிறேன். RJ பாலாஜி ஒரு பன்முக திறமைசாலி. நான் என்னை வெறும் 'சூர்யா'வாக மட்டும் பார்க்கிறேன், ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநர், நடிகர், கமெண்டேட்டர் எனப் பல அவதாரங்களில் செதுக்கிக் கொள்கிறார். சில ரசிகர்கள் பழைய விஷயங்களைப் பேசலாம், ஆனால் RJ பாலாஜியின் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து, என்னை இந்தப் படத்தில் செதுக்கிய இயக்குநர் RJ பாலாஜிக்கு பெரிய நன்றிகள். படம் பார்த்தவர்கள் முதல் பாதி மிகவும் எமோஷனலாகவும், இரண்டாம் பாதி அதிரடியான தியேட்டர் மொமெண்ட்ஸ் நிறைந்தும் இருப்பதாகச் சொல்கிறார்கள். மே 14 - இனி எல்லாம் உங்கள் கையில் தான். நிச்சயமாக இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்

LATEST News

Trending News

HOT GALLERIES