ஹாய் மச்சான்ஸ்.. நம்ம நமீதாவா இது.. 45 வயதிலும் குறையாக அழகுடன் ஸ்லிம் லுக்!

ஹாய் மச்சான்ஸ்.. நம்ம நமீதாவா இது.. 45 வயதிலும் குறையாக அழகுடன் ஸ்லிம் லுக்!

சென்னை: "ஹாய் மச்சான்ஸ்" என்ற ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்தத் தமிழ் நெஞ்சங்களையும் தன் வசப்படுத்திய கவர்ச்சிப் புயல் நடிகை நமீதா, திருமணத்திற்குப் பிறகு எடையைக் குறித்து மீண்டும் பழைய ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

நடிகை நமீதா: கேப்டன் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து ஏய், சாணக்யா, பம்பரக்கண்ணாலே, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, தகப்பன்சாமி, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்துத் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, எனப் பல மொழிகளிலும் கலக்கிய நமீதாவின் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தமிழும், பேரழகும் தென்னிந்திய ரசிகர்களைச் சுண்டி இழுத்தது

Namitha Photos

காதல் திருமணம்: கடந்த 2017-ம் ஆண்டு வீரன் சவுத்ரி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நமீதா, சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியிருந்தார். இவருக்கு 2022 ஆம் ஆண்டுஇரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தாய்மை மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் சூழலால் இவரது உடல் எடை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. பிரசவத்திற்குப் பிறகு கூடிய எடையைக் குறைக்கத் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நமீதா, தற்போது கடின உழைப்பால் எடையைக் குறைத்து மீண்டும் பழைய கியூட்டான நமீதாவாக மாறியுள்ளார்.

ஸ்லிம் லுக்: தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பச்சை நிறக் கட்டம் போட்ட புடவையில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து செம்ம ஸ்டைலாக வலம் வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கண்ணாடியின் முன் நின்று நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மெல்லிய புன்னகையுடன் அவர் கொடுத்த போஸைப் பார்த்த ரசிகர்கள், அடடே, நம்ம பழைய பில்லா நமீதாவா இது என கமெண்ட் பாக்ஸில் கேட்டு வருகின்றனர். நமிதாவிற்கு தற்போது 45 வயதாகினாலும் இளமை குறையாமல் இருக்கிறார்.

LATEST News

Trending News