தோல்வி முகம் தொடருதே.. மாளவிகா மோகனன் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலனே கிடைக்கல.. தப்பித்த 2 படம்!
சென்னை: ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். துல்கர் சல்மான் நடித்த பட்டம்போலா படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். 2013ம் ஆண்டு வெளியான மாளவிகா மோகனனின் முதல் படமே படுதோல்வியை சந்தித்தது.
தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்போதே அவரது நடிப்பு பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. ஆனாலும், வசூலில் மாஸ்டர் ஓரளவு தப்பித்து விட்டது.
கவர்ச்சிக்கு பஞ்சமில்லை: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக மாற கடும் முயற்சிகளை மாளவிகா மோகனன் எடுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் பிகினி போட்டோக்களுக்கும் கவர்ச்சி போட்டோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஏன் நடிகர் கார்த்தியே சர்தார் 2 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மோனிகா பெலுச்சி போல டிரெச் பண்ணிட்டு வருவார் என நினைத்தால், எங்களுக்கு ரொமான்ஸ் காட்சியே இல்லை என ஃபீல் செய்து பேசியிருந்தார்.
தொடர் தோல்வி: பேட்ட, மாஸ்டர் படங்களை கடந்து மாளவிகா மோகனன் தமிழில் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது அவரை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் உடன் மாளவிகா மோகனன் ஜோடி போட்டு நடித்த மாறன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஃப்ளாப் ஆனது. 2024ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் உடன் கடுமையான உடல் உழைப்பை போட்டு எருமை மாட்டின் மீதெல்லாம் ஏறி நடித்தும் அந்த படமும் தோல்வியை தழுவியது.

பட்ட கஷ்டமெல்லாம் வீண்: இந்த ஆண்டு மாளவிகா மோகனன் பிரபாஸின் ராஜாசாப் படத்தில் நடித்திருந்தார். கிளாமருக்கு கிளாமர் இருக்கு, ஆக்ஷனுக்கு ஆக்ஷன் இருக்கு என அடித்து துவம்சம் செய்தார். ஆனால், அந்த படம் அட்டு ஃப்ளாப் ஆகிவிட்டது. அதர்வா நடித்த இதயம் முரளி படத்தில் கிளைமேக்ஸில் சர்ப்ரைஸ் கேமியோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், கார்த்தியின் சர்தார் 2 படத்தை மலை போல நம்பியிருந்த மாளவிகா மோகனன் ரொமான்ஸ் எல்லாம் செய்யாமல், ஸ்டன்ட் காட்சிகளில் அதிகம் நடித்து நல்ல பர்ஃபார்மன்ஸையே கொடுத்து இருந்தார். ஆனால், அவர் பட்ட கஷ்டமெல்லாம் வீணாக போய் விட்டது.
அடுத்து விஜய் சேதுபதி படம் தான்: இந்தியில் மாளவிகா மோகனன் அறிமுகமான யுத்ரா படமும் பெரிதாக ஓடவில்லை. அதன் பிறகு இந்தி பட வாய்ப்புகளும் குவியவில்லை. மலையாளத்தில் மோகன்லால் உடன் நடித்த ஹ்ரிதயப்பூர்வம் படம் தான் பல வருடங்களுக்குப் பிறகு மாளவிகா மோகனனுக்கு 100 கோடி வசூலை கடந்த படமாக அமைந்தது. ஆனால், அப்போதும், லோகா படம் மலையாளத்தில் டாப் ஆனது. இந்நிலையில், தியாகராஜா குமாரராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் பாக்கெட் நாவல் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அவருக்கு இந்த படமாவது வெற்றிப் படமாக கோலிவுட்டில் மாறுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.