பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தங்கமயிலின் ஆயுத பூஜை போட்டோஸ்..
சரண்யா துரடி
சன் தொலைக்காட்சியில் கடந்த 2013 - 2016 ஆண்டுகளில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த மகாபாரதம் தொடரில் பாலி ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சரண்யா துரடி.
அதன்பின் நெஞ்சம் மறப்பதில்லை, சின்ன தம்பி, ரோஜா, ரன், வைதேகி காத்திருந்தால் போன்ற சீரியல்களில் நடித்தார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் ரோலில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் நீண்டநாள் காதலர் ராகுல் சுதர்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரண்யா.
தற்போது நவராத்திரி, ஆயுதபூஜை அன்று தங்களின் செல்ல நாயுடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.