யாருமே எதிர்பார்க்காத திடீர் மரணம்.. பாக்யராஜ் வீட்டுக்கு வந்த சிஎம் விஜய்.. சாந்தனுவுக்கு ஆறுதல்

யாருமே எதிர்பார்க்காத திடீர் மரணம்.. பாக்யராஜ் வீட்டுக்கு வந்த சிஎம் விஜய்.. சாந்தனுவுக்கு ஆறுதல்

சென்னை: முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பாக ஜீவாவின் அப்பாவும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளருமான ஆர்.பி. செளத்ரி உயிரிழந்தது முதல்வர் விஜய்யை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பதவி ஏற்பு விழா இருப்பதால் விஜய் வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் எழுவதற்கு முன்பாகவே விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக் கொள்ள செல்ல வேண்டிய சூழலில் இந்த மாதம் ஜூன் 10 பக்கத்து வீட்டில் இருந்த பாரதிராஜாவின் மறைவு செய்தி கேட்டதும் முதல் ஆளாக ஓடிச் சென்று பார்த்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் முதலமைச்சர் விஜய்.

அஜித் குமாரின் அம்மா மரண செய்தி அறிந்ததும் இரவே ஓடிச் சென்று பார்த்து அஜித் குமாருக்கு ஆறுதல் கூறினார்.

பாக்யராஜ் மறைவு: சமீபத்தில் தான் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரான விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார் பாக்யராஜ். கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட விஜய் முதலமைச்சர் ஆனது குறித்து பாராட்டி பேசியிருந்தார். இந்நிலையில், அவரது திடீர் மறைவு முதலமைச்சர் விஜய்யை மனதளவில் ரொம்பவே பாதிக்க வைத்துள்ளது. பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்ததுமே முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்றார். அந்த காலத்து எம்ஜிஆர் முதல் இந்த காலத்து விஜய் வரை அனைவரது நன் மதிப்பை பெற்ற நல்ல ஆத்மா பாக்யராஜ் என பலரும் போற்றி வருகின்றனர்.

CM Vijay pays his last respect to Late Director and Actor Bhagyaraj

முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி: இந்நிலையில், பாக்யராஜ் மரணமும் முதலமைச்சர் விஜய்யை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பாக்யராஜ் வீட்டுக்குச் சென்று அங்கே தேம்பி அழுது கொண்டிருக்கும் பாக்யராஜின் மகனும் விஜய்யின் நண்பருமான சாந்தனுவுக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திலும் பாக்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கூட்ட நெரிசல்: முதலமைச்சர் விஜய் மறைந்த பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவதை அறிந்ததும் அங்கே கடும் கூட்ட நெரிசல் உருவான நிலையில், போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டது அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES