20 ஆண்டுகளை கடந்த 23ஆம் புலிகேசி திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

20 ஆண்டுகளை கடந்த 23ஆம் புலிகேசி திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

தமிழ் சினிமாவில் உடல்மொழி நகைச்சுவையால் கோடானகோடி ரசிகர்களால் கவர்ந்தவர் வடிவேலு. நகைச்சுவை நடிகராக மட்டுமே நடித்து வந்த இவர், கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.

20 ஆண்டுகளை கடந்த 23ஆம் புலிகேசி திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | Imsai Arasan 23Am Pulikesi Movie Box Office

இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் வடிவேலுடன் இணைந்து மனோரமா, நாசர், மனோபாலா, நாகேஷ், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இன்று இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் கூட, ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கிறது.

 

வசூல் விவரம்

இந்த நிலையில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த நேரத்தில் இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் அன்றைய காலகட்டத்தில் ரூ. 17 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில், அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News