TRPயில் டாப் 5ல் இடம்பெறாத முக்கிய சீரியல் - காரணம் இதுதானா

TRPயில் டாப் 5ல் இடம்பெறாத முக்கிய சீரியல் - காரணம் இதுதானா

சின்னத்திரை வட்டாரங்களில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருவது சீரியல்களில் TRP ரேட்டிங் பற்றி தான்.

ஆம் ஒவ்வொரு வாரத்தின் சீரியலின் TRP ரேட்டிங்கை பார்க் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.

அதனை எதிர்பார்த்து அந்தந்த சீரியலின் ரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்ற வாரத்தின் TRP ரேட்டிங் குறித்து பார்க் இந்தியா நிறுவனம் லிஸ்ட் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இரண்டு இடத்தை படங்கள் பிடித்துள்ள நிலையில் அடுத்த இரண்டு இடங்களை சன் டிவி ரோஜா மற்றும் விஜய் டிவி பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளது.

மேலும் ஐந்தாம் இடத்தை சன் டிவி வானத்தைப்போல படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் TRPயில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த செம்பருத்தி சீரியல் டாப் 5 இடத்தில் இடம்பெறவில்லை.

இதற்கு முக்கிய காரணமே செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி ராஜ் விலகியது தான் காரணம் என்று சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES