ஜார்ஜியாவில் நடிகை பூஜா ஹெக்டே ! படமாக்கப்பட்ட தளபதி 65 படத்தின் முக்கிய காட்சி என்ன தெரியுமா?

ஜார்ஜியாவில் நடிகை பூஜா ஹெக்டே ! படமாக்கப்பட்ட தளபதி 65 படத்தின் முக்கிய காட்சி என்ன தெரியுமா?

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் பல்வேறு தடைகளுடன் வெளியாகிய போதும் கூட ரூ.250 கோடிகள் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்தியா திரும்பவுள்ளனர்.

 இந்நிலையில் விஜய்யும், படக்குழுவும் ஜார்ஜியா கிளம்பியதற்கு ஒரு நாள் கழித்தே படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ஜார்ஜியா சென்றார். அவரும், விஜய்யும் இடம்பெறும் டூயட் ஒன்றை அங்கு படமாக்குகின்றனர்.

மேலும் நடிகை பூஜா ஹெக்டே முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News