'பாட்ஷா' ஆட்டோக்காரன் கெட்டப்பில் சிம்பு: வைரல் வீடியோ

'பாட்ஷா' ஆட்டோக்காரன் கெட்டப்பில் சிம்பு: வைரல் வீடியோ

ஆட்டோக்காரன் என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ’பாட்ஷா’ படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரக்டர் தான் என்பதும் பெரும்பாலான ஆட்டோக்களில் இன்றும் பாட்ஷாவின் போஸ்டர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு ஆட்டோகாரன் கெட்டப்பில் இருக்கும் வீடியோ கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ உட்பட ஒரு சில படங்களில் அவருக்கு ஆட்டோகாரன் கேரக்டர் இல்லையே என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் இந்த ஆட்டோகாரன் கெட்டப் ஒரு தனியார் ஓடிடி நிறுவனத்தின் விளம்பரப் படத்திற்காக என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் சிம்புவுக்கு ஆட்டோகாரன் கெட்டப் மிகப்பொருத்தமாக இருப்பதாகவும், ஒருவேளை ‘பாட்ஷா’ படத்தின் ரீமேக் அல்லது இரண்டாம் பாகம் எடுத்தால் சிம்புவை நடிக்க வைக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES