நயன், சமந்தாவுடன் கலர்ஃபுல் ஆட்டம்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' வீடியோ!

நயன், சமந்தாவுடன் கலர்ஃபுல் ஆட்டம்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' வீடியோ!

நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பாடல் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம் பெற்ற ’டுடுடு’ என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. செம கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளே படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் பாணியில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடியில் இந்த படம் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES