'ஜாலியா நீ வாடி இது பிரைவைட் பார்ட்டி தான்': 'டான்' சிங்கிள் பாடல்

'ஜாலியா நீ வாடி இது பிரைவைட் பார்ட்டி தான்': 'டான்' சிங்கிள் பாடல்

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பிரைவைட் பார்ட்டி பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வருகிறது.

சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடி உள்ளனர். இவர்கள் இருவர்தான் தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலையும் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த பாடலின் வீடியோ கலர்ஃபுல் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பாக அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி நடன காட்சிகள் மற்றும் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனின் நடனக்காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES