அரசியின் திருமணத்தை நிறுத்த சதி செய்த குமரவேல்.. கடும் கோபத்தில் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் வாரம் என்னென்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அரசியின் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

கார்த்திக் தனக்கு அரசியை பிடித்துள்ளது என பாண்டியனிடம் கூற, தனது மகன்களை வைத்து கார்த்திக் எப்படிப்பட்டவன் என விசாரித்தார். அவர் நல்லவன் என தெரியவர, நம்பிக்கையோடு தனது மகளை கட்டிவைக்கலாம் என முடிவு செய்தார்.

இதனால், கார்த்திக் வீட்டில் இருந்து அனைவரும் பாண்டியன் வீட்டிற்கு பெண் பார்க்க வந்தனர். அனைவருக்கும் இந்த சம்மதத்தில் மகிழ்ச்சி என்பதால் உடனடியாக நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என முடிவு எடுத்தனர்.
குமரவேலின் சதி
இந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டாரை வழியில் சந்தித்து, அரசிக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என சொல்ல, அவர்கள் உடனடியாக பாண்டியன் வீட்டிற்கு வந்த இந்த சம்பந்தம் வேண்டாம் என கூறிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

அரசி அழுதுகொண்டே தனது ரூமிற்குள் செல்ல, கடும் கோபமடைந்த சரவணன், குமரவேலிடம் சண்டைக்கு செல்கிறார். இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.